Motivational Quotes in Tamil

Tamil Motivational Quotes
motivational kavithai in tamil

There are ups and downs in life. Some may overcome their downs easily but many of them struggle to overcome it. These motivational quotes really bring some hope during that situation.

Tamil Motivational Quotes for Success

புகழை மறந்தாலும்
நீ பட்ட அவமானங்களை மறக்காதே
அது இன்னொரு முறை
நீ அவமானப்படாமல் காப்பாற்றும்

ரசித்து வாழ்ந்தால் தான் வாழ்க்கை இல்லாமல் வாழ்வது அடைக்கப்படாத சிறைச்சாலை

முயற்சி என்னும் படிக்கட்டில் ஏற மறுத்தால் வெற்றி என்னும் உச்சத்தை அடைய முடியாது

வெற்றியை அடைவதற்கு முயற்சி செய்தால் மட்டும் போதாது. தோல்வியை தாங்குகிற மனவலிமையும் வேண்டும்

எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று
நீயும் பின்தொடராதே
உனக்கான பாதையை
நீயே தேர்ந்தெடு…

உறவுகள்
தூக்கியெறிந்தால்
வருந்தாதே
வாழ்ந்துக்காட்டு
உன்னை தேடிவருமளவுக்கு…

சந்தேகத்தை எரித்துவிடு நம்பிக்கையை
விதைத்துவிடு
மகிழ்ச்சி தானாகவே
மலரும்…

தனித்து போராடி கரைசேர்ந்த பின்
திமிராய் இருப்பதில் தப்பில்லையே

தோல்வி உன்னை துரத்தினால்
நீ வெற்றியை
நோக்கி ஓடு

எல்லாம் தெரியும் என்பவர்களை விட
என்னால் முடியும் என்று முயற்சிப்பவரே
வாழ்வில் ஜெயிக்கின்றார்…

முடியும் வரை முயற்சி செய்
உன்னால் முடியும் வரை அல்ல
நீ நினைத்ததை
முடிக்கும் வரை…

எதிரி இல்லை
என்றால்
நீ இன்னும்
இலக்கை நோக்கி
பயனிக்கவில்லை
என்று அர்த்தம்

உன்னை நீயே
யாருடனும் ஒப்பிடாதே
உன் சிறப்பு
எது என்பதை
நீயே உணராத பட்சத்தில்
மற்றவர்கள் அறிவது
என்பது எப்படி
சாத்தியம் ஆகும்

Life Motivational Quotes in Tamil

நேரம் இருக்கிறது பார்த்துக் கொள்ளலாம் என்று நேரத்தை வீணடிப்பவனே முட்டாள்

வாழ்வின் கடினமான சூழ்நிலையில் தன்னம்பிக்கையை தவிர வேறு எந்த கைகளும் நம்மை தாங்கி பிடிப்பது இல்லை

அதிஷ்டம் இருந்தால் மட்டும் போதாது தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் இருந்தால் மட்டுமே வெற்றி கனியை விரைவில் எட்ட முடியும்

ஒரு நாளில் பூத்து அதே நாளில் மறையும் பூக்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும் வாழ்க்கையை எப்படி சிரித்து கொண்டே வாழ வேண்டும் என்று

ஓடு இந்த உலகத்தை நீ சுற்றி பார்க்கும் வரை அல்ல இந்த உலகம் உன்னை திரும்பி பார்க்கும் வரை

முட்களுக்கு நடுவே தான் வாழ்க்கை என்றாலும் வாடும் வரைக்கும் சிரித்து கொண்டே இருக்கின்றன ரோஜா மலர்கள்

வயதை பின்னுக்கு தள்ளி
வைராக்கியத்தோடு வாழும்
வயதானவர்கள் ஒவ்வொரு
வீட்டின் தன்னம்பிக்கை நாயகர்கள்…!

தோற்றுக் கொண்டே இருந்தாலும் கவலைப்படாதே நிச்சயம் ஒரு நாள் வெற்றி பெறுவாய்
மனதில் உறுதியை மட்டும் வை கனவுகள் நனவாகும் காலம் வரும்